புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுக-சிபிஐஎம் இடையே தொடரும் இழுபறி

திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

News image

தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுக-சிபிஐஎம் இடையே தொடரும் இழுபறி

Updated On :11 மார்ச் 2021, 4:03 pm

DIN

திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

நடைபெற உள்ள தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளில் தொகுதிகளைப் பங்கீடு செய்வது மற்றும் இறுதி செய்வது, வேட்பாளர்களை அறிவிப்பது என தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. 

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக. விசிக, காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதிகளை இறுதி செய்துவிட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் திமுக உடனான தொகுதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சிபிஐஎம் போட்டியிட விரும்பிய தொகுதிகளை காங்கிரஸ் கோரியதால் இழுபறி நீடித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி போடியிடும் தொகுதிகளை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் சிபிஐஎம் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவாகவில்லை. சிபிஐஎம் கேட்ட பத்மநாபபுரம். திருப்பூர் தெற்கு, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக திமுக தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒப்பந்தம் நாளை இறுதியாகும் எனத் தெரிகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.