சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

அச்சுறுத்தும் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 4.01 லட்சம் பேர் பாதிப்பு: 4,187 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,078 -ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 4,187 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது

News image

கடந்த 24 மணி நேரத்தில் 4.01 லட்சம் பேர் பாதிப்பு

Updated On :8 மே 2021, 6:38 am

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,078 -ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 4,187 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 4,01,078 ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 37,23,446  பேராகவும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,187 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.18 கோடி (2,18,92,676) ஆகவும் அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 37,23,446 -ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,79,30,960 ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,18,609 குணமடைந்தனர். 

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 7 -ஆம் தேதி வரை 30,04,10,043 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 18,08,344 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 16,73,46,544 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.