சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என போக்குவரத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 
சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
Updated on
1 min read


சென்னை: பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என போக்குவரத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போக்குவரத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரோனா முழு ஊரடங்கையொட்டி, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஏற்கெனவே நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

மிகப்பெரிய வரவேற்பு: நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தேவைக்கு ஏற்ப சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று போக்குவரத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com