

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் மீன் வாங்குவதற்கு முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடியதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொது முடக்கத்திற்கு பின்னர் நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு உத்திர விட்டது.
இதனையடுத்து பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதே போல் மஞ்சளாறு அணையில் சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் மீன் வாங்க மக்கள் கூட்டம் கூடிவருகின்றனர்
சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமல் மக்கள் கூடுவதால் , கரோனா பன்மடங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.