கடன் வட்டி விகிதம் 4% ஆக தொடரும்: சக்திகாந்த தாஸ்

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ) 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போவும்  3.35 சதவிகிதமாக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கடன் வட்டி விகிதம் 4% ஆக தொடரும்: சக்திகாந்த தாஸ்

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ) 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போவும்  3.35 சதவிகிதமாக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் நலிவடைந்து காணப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் நிதி கொள்கைக் குழுவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளன.  கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டு வருகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுகிறது.  பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. தற்போதுள்ள (ரெப்போ) 4 சதவிகித வட்டி விகிதமே தொடரும், ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும். தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும்.

மேலும் 2021-22க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்.  2022-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என சக்திகாந்த தாஸ்  கூறினார்.

நான்காவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com