கேரளத்தில் புதிதாக 20,452 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 13th August 2021 06:31 PM | Last Updated : 13th August 2021 06:31 PM | அ+அ அ- |

கேரளத்தில் புதிதாக 20,452 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 20,452 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"புதிதாக 20,452 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36,52,090 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
மேலும் 114 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 18,394 ஆக உயர்ந்துள்ளது.
16,856 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,53,174 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,80,000 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."