முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
‘ஏமாற்றமே எஞ்சுகிறது’: தமிழக பட்ஜெட் குறித்து கமல் விமர்சனம்
By DIN | Published On : 13th August 2021 06:03 PM | Last Updated : 13th August 2021 06:03 PM | அ+அ அ- |

‘ஏமாற்றமே எஞ்சுகிறது’: தமிழக பட்ஜெட் குறித்து கமல் விமர்சனம்
மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கமல்ஹாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க | பெட்ரோல் மீதான வரி குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் தகவல்
இந்த காகிதமில்லா நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பதிவில், “தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தமிழக பட்ஜெட்: 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்
மேலும், “மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது” என அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.