‘ஜாக்கிரதை’: சமையல் எரிவாயு விலை உயர்விற்கு கமல் கண்டனம்
By DIN | Published On : 17th August 2021 05:50 PM | Last Updated : 17th August 2021 05:55 PM | அ+அ அ- |

‘ஜாக்கிரதை’: அரசை எச்சரிக்கும் கமல்
சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சா்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா - கேரளத்திற்கு ரூ.267.35 கோடி வழங்க மத்திய அரசு முடிவு
சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த ஜூலை 1 -ஆம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.850 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு இன்று, மீண்டும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'வயநாட்டுக்கு ஓடினால் மட்டும் மாறிவிடுமா': ராகுலை சீண்டும் நட்டா
இதன்படி, சென்னையில் இன்று முதல் ஒரு எரிவாயு உருளை ரூ.875-க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!” எனத் தெரிவித்துள்ளார்.