
கோப்புப்படம்
மாநிலங்களை மாற்றுவதனால் மட்டும் சிலரது குணாதிசயங்களும், நோக்கங்களும், மக்களுக்கு சேவையாற்றும் அர்ப்பணிப்பும் மாறிவிடாது என ராகுல் காந்தியை ஜெ.பி. நட்டா விமரிசித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 18 வரை தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டுக்குச் சென்றுள்ளார். திங்கள்கிழமை இரண்டு குடிநீர்த் திட்டங்களை அவர் தொடக்கிவைத்தார்.
இந்த நிலையில் கோழிக்கோட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கட்சியின் மாவட்ட கமிட்டி அலுவலகக் கட்டடத்தை கட்சியின் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
இதையும் படிக்க | அகில இந்திய மகிளா காங்கிரஸுக்கு புதிய செயல் தலைவர் நியமனம்
அப்போது அவர் கூறியது:
"ராகுல் காந்தியின் அரசியல் பயணம் கேரளத்திலும் நடக்கிறது. அவர் அமேதியில் தோற்றதால் வயநாட்டுக்கு ஓடினார். மாநிலங்களை மாற்றுவதனால் மட்டுமே ஒருவரது குணாதிசயங்களும், நோக்கங்களும், மக்களுக்கு சேவையாற்றும் அர்ப்பணிப்பும் மாறிவிடாது.
கேரளம் குறித்து பேசும்போதெல்லாம் மிகுந்த துயரமும், வேதனையும் அடைகிறேன். பிரதமர் மோடியிடமிருந்து அனைத்து உதவிகள் கிடைத்தபோதிலும், திறனுக்கேற்ப அது செயல்படுவதில்லை. கடந்த 30, 40 ஆண்டுகளாக கேரளத்தில் நிலவும் அரசியல் கலாசாரங்கள் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுகிறது."