புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அகில இந்திய மகிளா காங்கிரஸுக்கு புதிய செயல் தலைவர் நியமனம்

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தற்காலிக செயல் தலைவராக நீட்டா டிசோசாவை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 10:53 am

DIN

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தற்காலிக செயல் தலைவராக நீட்டா டிசோசாவை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு நேற்று அனுப்பியிருந்தார். 

கட்சியிலிருந்து விலகியதற்கான காரணம் எதையும் கூறாமல் ‘இந்திய தேசிய காங்கிரஸில் கடந்த 30 ஆண்டுகளாக அங்கம் வகித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது, எனது பொது வாழ்வில் புதிய அத்தியாயத்தை நான் தொடங்க இருப்பதற்கு உங்களுடைய நல்வாழ்த்துகள் கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், அகில இந்திய மகிளா காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தற்காலிக செயல் தலைவராக நீட்டா டிசோசா நியமிக்கப்படுகிறார் என்று  காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.