முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்
By DIN | Published On : 04th December 2021 09:14 AM | Last Updated : 04th December 2021 09:14 AM | அ+அ அ- |

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா
முன்னாள் தமிழக ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சனிக்கிழமை காலை காலமானார்.
ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா வயதுமுதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இன்று சனிக்கிழமை (டிச.4) காலமானார்.
ரோசய்யா ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநிலத்தின் முதல்வராக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார்.
2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.
ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக பதவிவகித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...