பகல்பத்து: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
By DIN | Published On : 04th December 2021 09:24 AM | Last Updated : 04th December 2021 01:41 PM | அ+அ அ- |

கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி, பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில், கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான
சனிக்கிழமை அர்ஜூன மண்டபத்தில் கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
மேலும் புகைப்படங்களைக் காண.. ஸ்ரீரங்கம்: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாள்கள் இந்த விழா நடைபெறும்.
கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் வீதியுலா வரும் நம்பெருமாள்.
இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான சனிக்கிழமை அர்ஜூன மண்டபத்தில் கவரிமான் தொப்பாரைக் கொண்டை , தங்க கிளியுடக் ரத்தின அபயஹஸ்தம் , கலிங்கதுரா , பவளமாலை , நெல்லிக்காய் மாலை ,காசு மாலை , புஜ கீர்த்தி , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...