முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடங்கியது
By DIN | Published On : 29th December 2021 11:52 AM | Last Updated : 29th December 2021 11:52 AM | அ+அ அ- |

ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி .
ஈரோடு: தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சி இன்று புதன்கிழமை (டிச.29) தொடங்கி வரும் 12.01.2022 வரை 15 நாள்களுக்கு நடைபெறுகின்றது. கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 40 விற்பனை நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க | காவிரி பாசனப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடை தீவிரம்
இதில் போர்வைகள், கோரா சேலைகள், பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், ஜமுக்காளம் உள்ளிட்ட அனைத்து வகையான கைத்தறி ரகங்களும் இடம்பெற்றுள்ளன.
இக்காண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்திற்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம், சபை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?