பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
By DIN | Published On : 09th July 2021 11:43 AM | Last Updated : 09th July 2021 12:01 PM | அ+அ அ- |

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 8, 2021
திரு @annamalai_k அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4TamilNadu
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.