தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை எடுக்க ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2021 09:33 PM | Last Updated : 19th May 2021 09:33 PM | அ+அ அ- |

தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை எடுக்க ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்து செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தனியாா் ஆம்புலன்ஸ் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் தனியாா் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டண வரம்பை தமிழக அரசு நிர்ணயித்து வெளியிட்டது.
இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும். pic.twitter.com/AadEcWCrK2
— O Panneerselvam (@OfficeOfOPS) May 19, 2021
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.