முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியது ஏன்?

கடந்த திங்கள்கிழமை உலகம் முழுவதும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியது ஏன்?
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியது ஏன்?

கடந்த திங்கள்கிழமை உலகம் முழுவதும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 8.30 மணி முதல் இணைய சேவைகளை வழங்கி வரும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இயங்கவில்லை.

சுமார் 6 மணிநேரங்களுக்கும் மேலாக நீடித்து வந்த சமூக வலைத்தளங்களின் முடக்கத்தால் இணையதளவாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் முகநூல் அமைப்புக் கட்டுமானத்தின் துணைத் தலைவரான சந்தோஷ் ஜனார்த்தனன், வைரஸ் ஊடுருவலால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படவில்லை எனவும், வழக்கமான பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களாலேயே பயனர்களால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கமான பராமரிப்பு வேலைகளில் ஒன்றின் போது, உலகளாவிய சேமிப்புத்திறனை மதிப்பிடும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட மென்பொருள் கட்டளையில் ஏற்பட்ட பிழை காரணமாக உலகளவில் உள்ள அனைத்து இணைப்புகளும் தற்செயலாக துண்டிக்கப்பட்டுவிட்டது என அவர் விளக்கமளித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட சிக்கலை மென்பொறியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் காரணமாக உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என சந்தோஷ் ஜனார்த்தனன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com