முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு
By DIN | Published On : 01st September 2021 06:52 PM | Last Updated : 01st September 2021 06:52 PM | அ+அ அ- |

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இதையும் படிக்க | காலநிலை மாற்றத்தால் 50 ஆண்டுகளில் 20 லட்சம் மக்கள் பலி: ஆய்வில் தகவல்
இதுதொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது சுட்டுரைப் பக்கத்தில், பல நல்ல முன்முயற்சிகளுடன் செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.