47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானாமதுரை: மஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவியை தரிசித்த பாதயாத்திரை பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து  பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள் புதன் கிழமை கோயிலுக்கு வந்தடைந்து தரிசனம் செய்தனர். 

News image
மதுரையிலிருந்து புறப்பட்டு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள்.
Updated On :16 பிப்ரவரி 2022, 9:25 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து  பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள் புதன் கிழமை கோயிலுக்கு வந்தடைந்து தரிசனம் செய்தனர். 
மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் பிரசித்தம் பெற்ற ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிராதேவி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்புடன் உலக மக்கள் அனைவரும்  ஆனந்தமாய் வாழ வேண்டி இக்கோயிலில் யாகம் நடத்தப்படும்.

இந்த யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். பிரத்தியங்கிரா கோயிலைச் சேர்ந்த பக்தர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மாசி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி 10 ஆவது ஆண்டாக ஏராளமான பக்தர்கள் பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்தனர். 

பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கடந்த 14 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிரத்தியங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோர் தலைமையில் பாதயாத்திரையாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் இந்த பக்தர்கள் தங்குவதற்கும் அன்னதானத்திற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம் உள்ளிட்ட பல இடங்களில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. புதன்கிழமை பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்த பக்தர்கள் பிரத்யங்கிரா தேவியை தரிசனம் செய்து ஊர் திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.