தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: விளக்கமளித்த ரிசர்வ் வங்கி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அதிகாரிகள் மரியாதை செலுத்தாதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: விளக்கமளித்த ரிசர்வ் வங்கி
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: விளக்கமளித்த ரிசர்வ் வங்கி
Published on
Updated on
1 min read

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அதிகாரிகள் மரியாதை செலுத்தாதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அதிகாரிகள் மரியாதை செலுத்தாதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கியில் சில அலுவலர்கள் எழுந்து நிற்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. 

ரிசர்வ் வங்கி அலுவலர்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.எம்.சாமி இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.