மணப்பாறையில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றவர்கள்.
மணப்பாறையில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றவர்கள்.

உலக இதய நாள்: மணப்பாறையில் மாரத்தான்

மணப்பாறையில் உலக இதய நாளை முன்னிட்டு 3500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டியினை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் துவக்கி வைத்து மாரத்தானில் தானும் ஓடினார். 
Published on

மணப்பாறையில் உலக இதய நாளை முன்னிட்டு 3500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டியினை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் துவக்கி வைத்து மாரத்தானில் தானும் ஓடினார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இதய நாளை முன்னிட்டு சிந்துஜா மருத்துவமனை மற்றும் தியாகேசர் ஆலை பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. போட்டியினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 21 கி.மீ போட்டியும்,  ஆண்கள், பெண்களுக்கான 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ போட்டிகளும் நடைபெற்றது.

குழந்தைகளிடையே மாரத்தான் ஓட்ட ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 மீட்டர் பந்தயமும் நடைபெற்றது. இதில் இரண்டரை வயதுடைய நொச்சிமேடு பகுதியினைச் சேர்ந்த ஹரிணி என்ற சிறுமி 500 மீட்டர் போட்டியில் பங்கேற்று ஓடிய சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. 3500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரும் அவர்களுடன் இணைந்து ஓடி ஓட்டத்தை முடித்தார். 

21 கிமீ தொலைவிற்கான போட்டியில் ஊட்டியைச் சேர்ந்த நிகில்குமார் என்பவர் மாரத்தான் சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com