நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா உத்தவ்தாக்கரே? உச்சநீதிமன்றத்தில் சிவசேனை மனு

மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் சிவசேனை கட்சியின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இந்நிலையில் நாளை (ஜூன் 30) நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவிற்கு எதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை மேற்கொள்ள உள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com