சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனையானது.
சா்வதேச பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஏப்ரலில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் விலை ஏப்.5-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சமாக ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் தங்கத்தின் விலை குறைந்தது.
இந்நிலையில், மூன்று நாள்கள் குறைந்து வந்த தங்கத்தின் விலை, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிகரிக்க தொடங்கியது.
இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை பவுன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இரண்டு நாள்கள் அதிகரித்து வந்த தங்கம், வியாழக்கிழமை சற்று குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,676-க்கும் பவுனுக்கு ரூ.32 குறைந்து 45,408-க்கும் விற்பனை ஆனது.
24-கேரட் சுத்த தங்கம் கிராம் ரூ.6,124-க்கும் பவுன் ரூ.48,992-க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.81,800-க்கும் விற்பனையாகியது.
அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை... வியாழக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலை, இன்று வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.352 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,720-க்கும், பவுன் ரூ.45,760-க்கும் விற்பனையாகிறது.