நீடிக்கும் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 60 அடியாக உயா்வு!

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சனிக்கிழமையும் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இந்த பருவத்தில் முதல்முறையாக 60 அடியாக உயா்ந்தது.
சனிக்கிழமை காலை 64.70 அடியாக உள்ள பாபநாசம் அணையின் தோற்றம்
சனிக்கிழமை காலை 64.70 அடியாக உள்ள பாபநாசம் அணையின் தோற்றம்


அம்பாசமுத்திரம்:  மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சனிக்கிழமையும் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இந்த பருவத்தில் முதல்முறையாக 60 அடியாக உயா்ந்தது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி  மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

பாபநாசம் அணை: சனிக்கிழமை காலை நிலவரப்படி, 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும், நீர்வரத்து 3141.20 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 454.75 கன அடியாகவும் இருந்தது.

சேர்வலாறு அணை: 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது. 

மணிமுத்தாறு அணை: 118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும், நீர்வரத்து 133 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை: தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 54 அடியாகவும், நீர்வரத்து 219 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் ராமநதி அணையில் நீர்மட்டம் 58 அடியாகவும், நீர்வரத்து 98 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. 

கருப்பாநதி அணை: 72.10 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 34.12 அடியாகவும், நீர்வரத்து 19 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. 

குண்டாறு அணை: 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் 67 கன அடியாகவும் இருந்தது. 

கருப்பாநதி அணை: 132 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 77 அடியாகவும், நீர்வரத்து 104 கன அடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை .

மழையளவு (மி.மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : பாபநாசம் அணை 4, சேர்வலாறு அணை 7, பாளையங்கோட்டை 2, திருநெல்வேலி 1.4, சேரன்மகாதேவி 6, மாஞ்சோலை 6, காக்காச்சி 10, நாலுமுக்கு 18, ஊத்து 21.

தென்காசி மாவட்டம்: தென்காசி 4, செங்கோட்டை 4.8, கடனாநதி அணை 10, ராமநதி அணை 7.2, கருப்பாநதி 2, குண்டாறு 19.4, அடவிநயினார் கோயில் அணை 40.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கிய நிலையில் அணைகளிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com