சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிகரிப்பு

சென்னையில் ஒரே நாளில் தக்காளி கிலோ ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ள தக்காளி விலை, இன்று சென்னையில் ஒரே நாளில் தக்காளி கிலோ ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது என கூறப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

வழக்கத்தைவிட சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தற்போது தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவு தக்காளி சென்னைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை ரூ.90 வரை விற்பனையான தக்காளி, சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com