பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராகுலுக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? சீமான் பேட்டி

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம் என்றவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள

News image

சீமான்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:31 pm IST

புதுக்கோட்டை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம் என்றவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:

அப்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும்; களத்தில் நிறைய வேலைகள் இருக்கின்றன. வேலைகளைப் பார்க்கட்டும். தவறில்லை.

தமிழகத்தில் சாதிய பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ப. ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. அரை நூற்றாண்டு காலம் பெரியார் மண் என்று சொல்லி வந்தார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பேரவைத் தலைவராக்கினார். திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிற்கவைத்து வெற்றி பெற வைத்தார்.

திமுக ஏன் ஆ. ராசாவை நீலகிரிக்கு அனுப்ப வேண்டும்? பெரம்பலூர் பொதுத் தொகுதியிலேயே நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமே?

மலை, மண் வளம் என்பது அடுத்து வரப்போகிற தலைமுறைக்கும் சேர்த்து இயற்கை கொடுத்த கொடை. இவற்றை கொள்ளையடித்தால் அடுத்து வரும் தலைமுறை எங்கே போவார்கள்?

இப்போதே ஒரு குடம் குடிநீருக்கு ரூ. 15 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் மாதத்துக்கு பெருந்தொகை செலவாகிறது.

எங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வேண்டாம். வைத்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தியை நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம். மக்களால் தோற்கடிக்கப்பட்டவரை எல்லாம் மாநிலங்களவை உறுப்பினராக்குகிறீர்கள்? ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? என்றார்.

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்துவதுதான். 

ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான் இருக்க முடியும்; ஒரு பேருந்துக்கு ஒரு ஓட்டுநர்தான் இருக்க முடியும். ஓட்டத்தெரியும் என்பதால் எல்லோரும் ஒரே பேருந்தை ஓட்ட முடியாது.

இப்படித்தான் நாம் தமிழர் கட்சி நடைபெறும் என்று சீமான் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.