நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் புகார்

 நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடைபெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் புகார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடைபெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் பெற்ற மனுக்களின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்போது, அரசு மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் அதிகம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கு, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு, 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சந்து கடைகள் ஏதும் இல்லை என தெரிவித்தார். 

இதற்கு மறுப்பு தெரிவித்து திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன் பேசுகையில், காவல்துறை தெரிவித்தது போல் சந்துக்கடைகள் எண்ணிக்கை எதுவும் குறைக்கப்படவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதுமட்டுமன்றி லாட்டரி விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது என்றார். 

இதே போல் விவசாயிகளும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் நடைபெறுவதாகவும், அது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். 
உடனடியாக, விவசாயிகள் குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் காவல் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com