இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்த சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்த சுவிஸ் வங்கி
Published on
Updated on
1 min read

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு வந்து சேர்ந்துள்ளது.

உலகின் புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றான சுவிஸ் வங்கி தானியங்கி தகவல் பரிமாற்ற ஏற்பாட்டின் அடிப்படையில் ஐந்தாவது முறையாக இந்திய அரசுடன் தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள். நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

தனி நபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான பொருளாதார கணக்குகள் அடங்கிய தகவல் இந்திய அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் குறித்த பெயர், முகவரி, சார்ந்திருக்கும் நாடு, வருமான கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளம், கணக்கு விவரங்கள், பொருளியல் தகவல்கள், கணக்கின் இருப்பு, மூலதன வருவாய் ஆகியன  பகிரப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பரிமாற்றத்தின் இரகசியத்தன்மை காரணமாக மொத்த  பணத்தின் மதிப்பு குறித்த தகவல்களை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. வரி ஏய்ப்பு, கருப்பு பணப் பரிமாற்றம், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் தவறான வழியில் செல்லுதல் போன்றவற்றை தடுக்க  நடைபெறும் விசாரணைகளில் இந்த தகவல்கள் உதவிகரமாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த பரிமாற்றத்தில் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் 104 நாடுகளுடன் 36 லட்சம் கணக்குகள் குறித்த தகவல்கள் சுவிஸ் வங்கியால் பகிரப்படுகிறது. அடுத்த ஆண்டறிக்கை 2024 செப்டம்பரில் இந்தியாவுக்கு அனுப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com