22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

ஓவியர் மாருதி காலமானார்

புகழ்பெற்ற ஓவியர் மாருதி காலமானார்.

News image
Updated On :28 ஜூலை 2023, 8:50 am IST

ஓவியர் மாருதி காலமானார்.

புதுக்கோட்டையில் பிறந்த இவருடைய இயற்பெயர் வி. ரங்கநாதன், வயது 86.

புணே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார்.

இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி விமலா கரோனா காலத்தில் மறைந்தார். 

2022 தினமணி தீபாவளி மலரில் கதையொன்றுக்கு ஓவியர் மாருதி வரைந்த ஓவியம். 

2022 தினமணி தீபாவளி மலரில் கதையொன்றுக்கு ஓவியர் மாருதி வரைந்த ஓவியம். 

இதையும் படிக்க |  மாந்தநேயா் மாருதி!

1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம்   வார இதழ்களில்  தொடர்ந்து ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

'ஃபோட்டோபினிஷிங்'கில் அமையும் இவருடைய ஓவியங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.