ராகுல் காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
ராகுல் காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்!

வயநாடு: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வயநாட்டில் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை மீண்டும் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, புதன்கிழமை காலை கேரளம் வரும் ராகுல் காந்தி பகல் 12 மணியளவில் சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

கேரளம் முப்பைநாடு என்ற கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் ராகுல், கல்பெட்டா வரை சாலை மார்க்கமாக பயணிப்பார் என அந்த கட்சியினர் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்!
சீன தூதராக மோடியை நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

காலை 11 மணிக்கு கல்பெட்டாவில் இருந்து நடைபெறும் சாலைப் பேரணியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், தீபாதாஸ், இந்திய தேசிய மாணவர் சங்கப் பொறுப்பாளர் கன்ஹையா குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சி தலைவரான வி.டி.சதீசன் மற்றும் கேபிசிசி செயல் தலைவர் எம்.எம்.ஹாசன் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த சாலையில் பேரணியில் கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சாலையில் பேரணி மதியம் சிவில் ஸ்டேஷன் அருகே முடிவடையும், அதன் பிறகு ராகுல் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்வார் என்று கட்சி தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியவுடன் நாளை தில்லி திரும்புகிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவியும், கட்சியின் மூத்த தலைவருமான ஆனி ராஜா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கேரளத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி மொத்தம் 10,92,197 வாக்குகளில் 7,06,367 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com