சீன தூதராக மோடியை நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரையிலான இந்திய நிலப்பரப்பை சீனர்கள் தட்டிப் பறிப்பதாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்
சீன தூதராக மோடியை நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

அருணாசல பிரதேச விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, கடந்த திங்கள்கிழமை அந்த மாநிலத்தின் 30 பகுதிகளுக்கு சீன எழுத்துகள் கொண்ட பெயரை அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவைை பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ள நிலையில், அருணாசல பிரதேச விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் எக்ஸ் பதிவு:

“லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரையிலான இந்திய நிலப்பரப்பை சீனர்கள் தட்டிப் பறித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடியோ, யாரும் ஆக்கிரமிக்கவில்லை, நாங்களும் அப்பகுதிகளுக்கு செல்ல மாட்டோம் எனக் கூறிக் கொண்டிருக்கிறார். நமது வீரர்கள் ஆதரவற்ற நிலையில் அச்சத்துடன் இருக்கிறார்கள். பெய்ஜிங்கின் செயல் தூதராக பிரதமரை நியமிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரதமரை கடுமையாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, சில நாள்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், ”மோடி ஜெயிக்கக்கூடாது, அவரை தோற்கடிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com