ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை: 12 மணி நேரமாக தொடரும் மீட்புப் பணிகள்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்கும் பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருவதாக
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை: 12 மணி நேரமாக தொடரும் மீட்புப் பணிகள்!

கர்நாடகம்: கர்நாடகம் மாநிலம் இண்டிகா பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்கும் பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்நாடகம் மாநிலம் விஜயபுரா மாவட்டம், இண்டிகா தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்த சதீஷ்- பூஜா தம்பதிக்கு ஒன்றரை வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது.

சதீஷ் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார்.

சங்கரப்பா தனது நிலைத்தில் செவ்வாய்க்கிழமை புதியதாக ஆழ்துளைக் கிணறு ஒன்றை அமைத்துள்ளார். ஆனால் அதில் தண்ணீர் வராததை் அடுத்து ஆழ்துளை கிணறை மூடாமல் விட்டுள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை: 12 மணி நேரமாக தொடரும் மீட்புப் பணிகள்!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

இந்த நிலையில், திறந்த நிலையில் கிடந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்து குழந்தை சாத்விக் புதன்கிழமை மாலை தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். நீண்ட நேரமாக குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடியபோது குழந்தை கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் கடந்த 12 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல், விரைவாக குழந்தையை மீட்க விஜயபுரா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், குழந்தை தனது பெற்றோருடன் பாதுகாப்பாக மீண்டும் இணைவதற்கு பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழைந்தை மீட்கும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com