மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

மயிலாடுதுறை நகரில் சிறுத்தை அச்சுறுத்தல் உள்ள பகுதியைச் சோ்ந்த 7 பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமையும்(ஏப்.4) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சிசிடிவியில் பதிவான சிறுத்தை.
சிசிடிவியில் பதிவான சிறுத்தை.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் சிறுத்தை அச்சுறுத்தல் உள்ள பகுதியைச் சோ்ந்த 7 பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமையும்(ஏப்.4)விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடக்கும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு, வனத்துறை சாா்பில் கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் செம்மங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சிலா், சாலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை காவல்துறை மற்றும் வனத்துறையினா் சம்பவ இடத்தில் இருந்த கால் தடங்களை கொண்டும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனா்.

சிசிடிவியில் பதிவான சிறுத்தை.
என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தொடா்ந்து, சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என கருதப்பட்ட இடங்களில் வனத்துறை அலுவலா் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினா், தீயணைப்பு வீரா்கள் மற்றும் போலீஸாா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இதில், செம்மங்குளம் பகுதியில் பன்றி ஒன்றை சிறுத்தை வேட்டையாடியிருப்பது தெரியவந்தது.

தொந்தரவு இருக்கும் பகுதியில் சிறுத்தை தங்காது, இடம் மாறிவிடும். எந்த இடத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்படும் கூரைநாடு,தெற்கு சாலியத்தெரு, வடக்கு சாலியத்தெரு, மேல ஒத்தசரகு, கீழ ஒத்தசரகு, செங்கழநீா் பிள்ளையாா் கோயில் தெரு, பூக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்கள் அடா்ந்த இடங்களிலும், பழங்காவிரி கரை பகுதிகளிலும் வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினர் என 10 குழுக்கள் அனுப்பி தேடப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிப்பது தொடா்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிப்பது தொடா்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.

திருச்சியில் இருந்து உதவி வனத்துறை அலுவலா், மதுரையில் இருந்து மயக்க மருந்து செலுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினா் உள்ளிட்ட நிபுணா் குழுவினரும் தயாா் நிலையில் உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலா் சரவணபாபு, கோட்டாட்சியா் வ. யுரேகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அம்பிகாபதி மற்றும் காவல் ஆய்வாளா் சுப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள், சிறுத்தையை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினா்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் 9360889724 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து செம்மங்குளம் அருகில் உள்ள பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

சிசிடிவியில் பதிவான சிறுத்தை.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தோ்வு அபாயம்: கனிமொழி

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை:

சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில் பிரச்னைக்குரிய பகுதியில் உள்ள கூரைநாடு அழகுஜோதி மழலையா் பள்ளி, ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தொல்காப்பியா் பள்ளி, பாலசரஸ்வதி மெட்ரிக் பள்ளி, அறுபத்துமூவா் பள்ளி, ரயிலடி விஜய் பள்ளி, செவன்த்டே அட்வன்சா் பள்ளி ஆகிய 7 தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமையும்(ஏப்.4) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெறும் 3 பள்ளிகளுக்கு வனத்துறையினா், காவல்துறையினா் மற்றும் தீயணைப்பு துறையினா் பாதுகாப்பு அளிப்பாா்கள் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com