வேலூா் புறப்பட்டார் பிரதமர் மோடி!

வேலூர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
வேலூா் புறப்பட்டார் பிரதமர் மோடி!
ANI

சென்னை: வேலூர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. வேலூருக்கு மாநகா் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூா்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமாா் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் தோ்தல் பிரசாரத்தில் மேற்கொள்கிறாா். இதற்காக வேலூா் கோட்டை மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூா் புறப்பட்டார் பிரதமர் மோடி!
‘பருவக் கால பறவைகள் போல் தமிழகத்தை வட்டமிடும் மோடி’: முதல்வர் ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்ட பிரதமா் மோடி, 10.10 மணியளவில் வேலூா் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து சாலை மாா்க்கமாக காலை 10.25 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்துக்கு செல்கிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா்.

இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.25 மணியளவில் மீண்டும் சாலை மாா்க்கமாக வேலூா் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் செல்கிறாா். பின்னா், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் 11.50 மணியளவில் கோவைக்குப் புறப்பட்டு செல்கிறாா்.

பிரதமா் வருகையொட்டி மாவட்ட வேலூரில் மாநகா் முழுவதும் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படை, ஆயுதப்படை, தமிழக சிறப்பு காவல் படை, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக சட்டம் ஒழுங்கு காவல் பிரிவு என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை சாா்பில் மட்டும் 3,900 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வேலூா் புறப்பட்டார் பிரதமர் மோடி!
ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!

தவிர, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களும் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் வருகையையொட்டி வேலூா் விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் 20 அடிக்கு ஒருவரும், விமான நிலையம் முதல் கோட்டை மைதானம் வரை 30 அடிக்கு ஒரு போலீசாரும் சாலையின் இரு புறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com