ரமலான்: விழுப்புரத்தில் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள்!

ரமலான் பண்டிகையையொட்டி விழுப்புரம் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
விழுப்புரம் காமராஜர் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
விழுப்புரம் காமராஜர் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம் : ரமலான் பண்டிகையையொட்டி விழுப்புரம் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் காலம் உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையான நோன்பிருந்து பசித்துன்பத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, சகிப்புத் தன்மையும், அன்பு, இரக்கம், கருணை, ஈகை என்னும் பண்புகள் சிறக்க இஸ்லாமியர்களால் ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாள் கொண்டாடப் படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதக் காலத்தக்கு நோன்பிருந்து இஸ்லாமியர்கள் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

ரமலான் பிறை புதன்கிழமை தெரிந்ததையடுத்து, வியாழக்கிழமை (ஏப்ரல் 11) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு காஜி அறிவித்திருந்தார்.

விழுப்புரம் காமராஜர் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
பிரதமர் வேட்பாளர் யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி

புத்தாடை அணிந்து கொண்டாட்டம் : ரமலான் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் இஸ்லாமியர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

விழுப்புரம் பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்குத்தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல்,வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல்,மருதூர் தக்வா மஸ்ஜித் பள்ளிவாசல்,புதுச்சேரி சாலை ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்ளிட்ட விழுப்புரம் நகரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளவனூர், செஞ்சி, மரக்காணம், கோலியனூர், காணை என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டவர்கள் பின்னர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com