கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்ச்சித்துள்ளனர். பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருக்கும் பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது.

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது
ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அதே கிராமத்தைச் சேர்ந்த வெற்றி(21), கிருஷ்ணகுமார்(21), சதீஷ்(29), விஜயராஜ்(22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com