
பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் மே 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02/2024/CHQ
பணி: Junior Executive(Engineering-Civil)
காலியிடங்கள்: 90
பணி: Junior Executive(Engineering-Electrical)
காலியிடங்கள்: 106
பணி: Junior Executive(Engineering-Electronics)
காலியிடங்கள்: 278
பணி: Junior Executive(Engineering-Information Technology)
காலியிடங்கள்: 13
பணி: Junior Executive(Architecture)
காலியிடங்கள்: 3
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ முடித்தவர்களும் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 1.5.2024 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,500 - 1,40,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.