
டிஆர்டிஒ இன் கீழ் நாசிக்கில் செயல்பட்டு வரும் ACEM ஆராய்ச்சி மையத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். ACEM/HRD/APPRENTISHIP/2024-25
பயிற்சி: Graduate Apprentice/Technician Apprentice
காலியிடங்கள்: 41
உதவித்தொகை: பயிற்சியின் போது டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12,000 உதவிக்தொகை வழங்கப்படும்.
தகுதி: 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு தொழில்பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பப் படிவம், மதிப்பெண் சான்று நகல், இணையதளத்தில் விண்ணப்பித்த பதிவு செய்த சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து apprentice.acem@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.4.2024 தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.