பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை
பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி), பழங்குடியின சமூகத்தினரின் (எஸ்டி) இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

மேலும், ‘காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமன் சாலிசா (ஹனுமன் துதி பாடல்) கேட்பதுகூட குற்றம்’ என்றும் ஆனால், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கை குறித்து யாரும் கேள்வியெழுப்ப முடியாது என்று மோடி பேசினார்.

இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பிரதமர் இப்படி பேசியிருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே
தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை.

தேர்தலுக்காக, மங்களசூத்திரம் பாதுகாப்பாக இருக்காது, கோயில் சொத்துகளை கைப்பற்றி மறுபங்கீடு செய்து ‘குறிப்பிட்ட’ மக்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் பெரும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளது போன்ற வினோதமான குற்றம்சாட்டுகளை எல்லாம் கூறிவருகிறார்.

இந்த நாட்டை 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஒருமுறையாவது இப்படி நடந்திருக்கிறதா?

1962 போரின் போது இந்திரா காந்தி தனது நகைகளை நன்கொடையாக வழங்கினார். சுதந்திர இயக்கத்திற்காக மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் அலகாபாத்தில் உள்ள தங்கள் வீட்டை நன்கொடையாக வழங்கினர்.

நமது தலைவர்கள் வாழ்ந்து, தேசத்துக்காக தங்கள் உயிரை, ரத்தத்தை தியாகம் செய்துள்ளனர். ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை என்று கார்கே தெரிவித்தார்.

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

சொல்வதை எதையும் சொய்யமாட்டார்

மேலும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லடசம் தருவோம் என்று சொன்ன மோடி, அப்படி எதையும் மக்களுக்கு தரவில்லை.

அடுத்த தேர்தலில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றவர் சொன்னவர், வாக்குறுதிகள் எதையும் செய்யாது மோடி, இப்போது மீண்டும் மோடியின் உத்தரவாதம் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் உத்தரவாதம் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com