தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் என்று தமிழ்நாடு வெதர்மென் பதிவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிகழாண்டு கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டியும் அதிகரித்துள்ளதால், கடும் வெப்பத்தாலும் வெப்ப அலைகளாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் என்று தமிழ்நாடு வெதர்மென் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழகத்தில் மே 1 முதல் 4 வரை வட உள் தமிழகத்தில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப்படம்
சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

அதே நேரத்தில், மே 5 முதல் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் பகுதிகளுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மே முதல் வார இறுதியில் இருந்து மே 2-வது வாரம் வரை சில இடங்களில் மழை பெய்யும். பெங்களூரும் இதில் இணையலாம்." என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com