
விழுப்புரம்: மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசின் பாரபட்சத்தை கண்டித்து விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலர் ஆர்.கலியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் கே.திருச்செல்வம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆ.சௌரிராஜன் ஆகியோர் கலந்து கண்டு மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சங்கரன், எஸ்.கீதா, எஸ்.வேல்மாறன், ஆர்.மூர்த்தி,ஆர்டி .முருகன், வட்டச் செயலர் ஆர்.கண்ணப்பன்,எஸ்.கணபதி, கே.சிவக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.சிவராமன், கே.உலகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.கிருஷ்ணமூர்த்தி, கே.அம்பிகாபதி, எஸ்.பிரகாஷ் எஸ்.சித்ரா, ஆர்.தாண்டவராயன், ஏ.நாகராஜன், கே.சுந்தரமூர்த்தி, கே.வீரமணி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எஸ்.ராமச்சந்திரன், என்.நாராயணன், எம்.ராஜேந்திரன், என்.ஜெயச்சந்திரன், ஜெ.ஜெயமலர், ஜி.நிதானம், ஆர்.பாலசுப்பிரமணியம், திவ்யா பிராங்க்ளின் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.