தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 780 பேருக்கு வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில், நிதித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.







