கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் பலி, 2 பேர் காயம்; 2 பேர் மாயம்

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேசுவரம் மீனவர் ஒருவர் பலியானார்.

News image

இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவரின் மீன்பிடி படகு.

Updated On :1 ஆகஸ்ட் 2024, 7:28 am

DIN

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேசுவரம் மீனவர் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர். மேலும் மாயமான 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை இரவு 397 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததுடன்,ராமேசுவரம் மீனவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. இதில் விசைபடகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த மூக்கையன், மலைசாமி, ராமச்சந்திரன் மற்றும் முத்து முனியாண்டி ஆகியோர் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு படகு உரிமையாளர் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீன்பிடி படகு முழுமையாக சேதமடைந்ததாகவும், படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 2 பேர் புங்குடுதீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காணாமல் போன 2 மீனவர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.