ராமேசுவரம்: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் நான்கு படகுகளில் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் 22 பேரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 22 பேரையும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
Summary
22 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




