முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஞ்சுமன் கெய்க்வாட் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அஞ்சுமன் கெய்க்வாட்.
Anshuman
அஞ்சுமன் கெய்க்வாட்Din
Published on
Updated on
1 min read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஞ்சுமன் கெய்க்வாட்(வயது 71) புதன்கிழமை காலமானார்.

1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அஞ்சுமன் இடம்பெற்றிருந்தார்.

இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் அஞ்சுமன். மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும், தேர்வுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Anshuman
வயநாடு நிலச்சரிவு: 3-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஞ்சுமன், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் சிகிச்சைக்காக பிசிசிஐ தரப்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது.

இந்திய அணிக்காக சுமார் 22 ஆண்டுகளில் 205 முதல்தர போட்டிகளில் அஞ்சுமன் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 மணிநேரம் களத்தில் நின்று 201 ரன்கள் எடுத்தார்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com