
சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுவதால் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜெ-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 11.08.2024, 18.08.2024 மற்றும் 25.08.2024 ஆகிய நாள்களில் அதிகாலை 02.00 மணி முதல் 10.00 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியினை நடத்த தனியார் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
மேற்படி "Happy Street" நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1. ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்ஷைன் பள்ளி அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "யு" திரும்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
2. விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புல் "யு" திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.