
ரூ. 44,125 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை அமைச்சா் தங்கம் தென்னரசு சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்தன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ரூ. 44,125 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆக. 17-ல் திறந்துவைக்கிறார்.
இன்றைக்கு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ,
முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்த முழுமையான தகவல்கள் குறித்துப் பின்னர், முதல்வர் அலுவலகம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களுடன் பேசியதாவது:
முதலமைச்சர் எப்போதும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது எத்தனை கோடி ஒப்பந்தங்கள் வருவதை விட எத்தனை நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு தற்போது சைட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டது. அது தொடர்பான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதலீடு செய்யப்படும் நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து அறிவிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.