ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
சமீபத்திய சம்பவங்களை கருத்தில்கொண்டு ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புவோர் +7 965 277 3414 என்ற எண்ணையோ அல்லது edu1.moscow@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறியுள்ளது.
ரஷியாவின் குா்ஸ்க் எல்லைப் பகுதிக்குள் உக்ரைன் ராணுவம் ஊடுருவலைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.