வயநாடு: வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ராணுவம், சிறப்பு அதிரடிப்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 121 ஆண்கள், 127 பெண்கள் உள்பட 248 பேரின் 349 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
இதில், 52 உடல் பாகங்கள் சிதைந்துள்ளதால் கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும் என அந்த மாநில வருவாத்துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராஜன் கூறுகையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரிய வரும். இதுவரை மீட்கப்பட்ட உடல் பாகங்களில் 405 உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை நிறைவடைந்துள்ளன. இதுவரை 115 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.பிகாரைச் சேர்ந்த மூன்று பேரின் உறவினர்களின் ரத்த மாதிரிகள் தற்போது கிடைத்துள்ளன. பரிசோதனைகளின் முடிவுகள் வரும் போது, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் முகாம்ங்களில் தங்க வைக்கப்பட்டுவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான வேலைகளில் ஆட்சியர் செய்து வருகிறார். தற்போது அவர்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ள 53 வீடுகள் மற்றும் வழங்கப்படக்கூடிய எஞ்சிய வீடுகளின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு ஹரிசன் மலையாள தொழிற்சங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக பிரதிநிதிகள் ஆய்வு நடத்தி, எந்தெந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிக்கையை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேப்பாடி, முப்பைநாடு, வைத்திரி, கல்பட்டா, முட்டில் மற்றும் அம்பலவயல் உள்ளாட்சி எல்லைகளுக்குள் ஒரு முழுமையான வசதிகளுடன் குடியேறுவதற்கான வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள் தலைமையில் வாடகை வீடுகளுக்கான விசாரணை புதன்கிழமை நடத்தப்படும். இதில், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு, உள்ளாட்சி எல்லைக்குள் இருக்கும் வாடகை வீடுகளைக் கண்டறிந்து அறிக்கை அளிக்கும். இதுவரை 1368 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
வயநாடு நிலவரம் குறித்து பேசிய கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், "நிலம்பூர் பகுதியில் இருந்து மேலும் 3 உடல் பாகங்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது 231 உடல்கள் மற்றும் சுமார் 206 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 1505 உடல்கள் உள்ளன. 12 முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மற்றும் 415 உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்படும். செவ்வாய்க்கிழமையும் நிலம்பூர்-வயநாடு பகுதிகளில் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள், காவல் துறை போலீஸ் மற்றும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை முண்டக்கை-சூரல்மலை பேரிடர் பகுதிகளில் 260 தன்னார்வலர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் சசீந்திரன் தெரிவித்தார்.
சூரல்மலை பாலத்தின் கீழ் வனப்பகுதி வழியாக ஓடும் ஆற்றின் கரையை மையமாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மலப்புரம் மாவட்டம் சாலியாற்றில் செவ்வாய்க்கிழமையும் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது.