

சென்னை: மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியிலிருந்து விலகியதை அடுத்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன் என்று நடிகை குஷ்புசுந்தா் தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியில் இருந்து நடிகை குஷ்பு விலகுவதாக ஜூன் 28-ஆம் தேதி அளித்த கடிதம் ஜூலை 30-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் புதன்கிழமை பகிரப்பட்டன.
இதனை மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மாவும் உறுதிப்படுத்தினாா்.
இதுதொடர்பாக குஷ்பு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மகளிர் ஆணைய உறுப்பினர் என்பது கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டது. அந்த பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டதால் இப்போது என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். இதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்.
பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்நெடுத்து செல்வதற்கான எனது பயணத்தில் வதந்தி பரப்புவோர் இனி இருக்கமாட்டார்கள்.
இது குறித்து சென்னையில் பாஜக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை விளக்கமாகப் பேசுவதாக என குஷ்புசுந்தர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.