
சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தேநீர் விருந்தில் அரசு சார்பில் தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார்.
சுதந்திர நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார். அதன்படி, இன்று(ஆக. 15) ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.